A healthy and popular South Indian dish. Serve with hot rice and ghee.
ஒரு ஆரோக்கியமான மற்றும் பிரபலமான தென்னிந்திய டிஷ். சூடான அரிசி, நெய் சேர்த்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ – ஒரு கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – மூன்று டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
புளி – கோலி குண்டு அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின், அதே கடாய் காய்ந்ததும் வேப்பம்பூ சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ மற்றும் உப்பு, புளி சேர்த்து கோரகோரவென்று அரைக்கவும்.
சூட சாதத்துடன் பிசைந்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.