Home Tamil வெங்காய சப்ஜி

வெங்காய சப்ஜி

0 comment
Published under: TamilUncategorized
வெங்காய சப்ஜி பல உணவுகளுக்கு ஒரு அற்புதமான சைடிஷ். இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம்.

விருந்து என்று வந்து விட்டாலே நம்மில் பெரும்பாலானோர் ஏதாவது வித்தியாசமான ஒரு உணவை செய்து நாம் விருந்தினர்களை அசத்த வேண்டும் என்று எண்ணுபவர்களாகத்தான் இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான வெஜிடபிள் சப்ஜி என்கின்ற சைடிஷ் உணவாகும். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான வெங்காய சப்ஜியின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Onion Sabji

Onion Sabji / வெங்காய சப்ஜி

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக நாம் சப்பாத்திக்கு காலிஃபிளவர் குருமா, பன்னீர் பட்டர் மசாலா, அல்லது சிக்கன் பட்டர் மசாலா போன்ற சைடிஷ்களை தான் பயன்படுத்தி இருப்போம். நாம் வழக்கமாக செய்யும் சைடிஷ்களுக்கு ஒரு நல்ல மாற்றாக இந்த வெங்காய சப்ஜி அமையும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

வெங்காய சப்ஜி  செய்ய நாம் பயன்படுத்தும் தக்காளி சாறு மற்றும் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, பெருங்காய தூள், கசூரி மேத்தி போன்ற சுவையூட்டிகளில் வறுத்த சின்ன வெங்காயம் நன்கு ஊறி அற்புதமாக இருக்கும். பொதுவாக சின்ன வெங்காயத்தை விரும்பாதவர்கள் கூட இந்த வெங்காய சப்ஜியில் ஊறி இருக்கும் சின்ன வெங்காயத்தை மிகவும் விரும்பி உண்பார்கள். அதற்கு நாங்கள் உத்தரவாதம்.

சில குறிப்புகள்:

வெங்காயத்தை முழுமையாக நறுக்காமல் அதன் மேல் பகுதியில் கிராஸ் வடிவத்தில் லேசாக கட் செய்தால் வெங்காயம் உள்ளே நன்கு வேகுவதற்கு வசதியாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

வெங்காய சப்ஜி வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை முதல் முதலாக இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். காலப்போக்கில் மெல்ல மெல்ல இவை வட இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பிரபலம் அடைய துவங்கி இருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

வெங்காய சப்ஜி செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 35 லிருந்து 40 நிமிடம் எடுக்கும்.

வெங்காய சப்ஜியை முழுமையாக சுமார் 50 நிமிடத்தில் இருந்து 55 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

வெங்காய சப்ஜியை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

வெங்காய சப்ஜி செய்ய நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் தயிரில் புரத சத்து, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் A, B 6, மற்றும் B12 உள்ளது. இவை எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Onion Sabji
3 from 1 vote

வெங்காய சப்ஜி

வெங்காய சப்ஜி பல உணவுகளுக்கு ஒரு அற்புதமான சைடிஷ். இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம்.
Prep Time15 minutes
Cook Time30 minutes
Total Time45 minutes
Course: Side Dish
Cuisine: Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 1/2 cup தயிர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 24 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 7 பல் பூண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 2 tsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • 1 tsp சீரகம்
  • 1/2 tsp கருஞ்சீரகம்
  • 1 tsp பெருஞ்சீரகம்
  • 1 tsp கரம் மசாலா
  • 1/2 tsp பெருங்காய தூள்
  • 1 tsp கசூரி மேத்தி
  • 1 tsp உப்பு
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 1 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் கிராஸ் இட்டு வைத்திருக்கும் முழு சின்ன வெங்காயங்களை போட்டு வெங்காயம் சற்று பொன்னிறமாகும் வரை அதை வதக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதே pan ல் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 1 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பெருங்காயம், மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் இருக்கும் தண்ணீர் சற்று வற்றும் வரை அதை வதக்கவும்.
  • தண்ணீர் சற்று வற்றிய பின் அதில் நன்கு அடித்த தயிரை சேர்த்து அதை கிளறி விடவும்.
  • அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் 1 cup அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 20 நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான வெங்காய சப்ஜி ரெடி. இதை உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

வெங்காய சப்ஜி செய்வதற்கு சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை பயன்படுத்தலாமா?

நிச்சயம் கூடாது. சின்ன வெங்காயத்திற்க்கு என்று தனி சுவை இருக்கிறது. அதனால் சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் வெங்காய சப்ஜி நன்றாக இருக்கும்.

வெங்காய சப்ஜி எந்தெந்த உணவுகளுக்கு ஏற்ற சைடிஷ் ஆக இருக்கும்?

வெங்காய சப்ஜியை இன்னும் காரமாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் வேண்டும் என்றால் கூடுதலாக ரெண்டு பச்சை மிளகாய்யை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக காஷ்மீர் மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காய சப்ஜியில் நாம் சேர்க்கும் சின்ன வெங்காயத்தை பொரிக்காமல் அப்படியே சேர்க்கலாமா?

கூடாது. சின்ன வெங்காயத்தை வறுத்து சேர்த்தால் அதன் சுவையே தனிதான்.

வெங்காய சப்ஜியில் சேர்க்கும் தக்காளியை அரைத்து தான் சேர்க்க வேண்டுமா நறுக்கி சேர்க்க கூடாதா?

தக்காளியை அரைத்து சேர்த்தால் தான் நன்கு கிரேவியாக இருக்கும். இல்லையென்றால் தக்காளி தொக்கு போல் ஆகிவிடும்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter