தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
வெல்லம் – நான்கு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு பரங்கிக்காய் சேர்த்து சுருண்டு வரும்வரை நன்றாக வதக்கவும்.
பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
சிம்மில் வைத்து வெல்லம் சேர்த்து நன்றாக குழையும் வரை வேகவிடவும்.
பிறகு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
—–
பரங்கிக்காய் பச்சடி செய்முறை வீடியோ – Parangikai Pachadi Recipe Video
https://www.youtube.com/watch?v=iOtr2GI1x0Y