ஆரோக்கியமான மற்றும் எளிய சாலட்.
தேவையான பொருட்கள்
கேரட் – கால் கப் (துருவியது)
வெள்ளரிக்காய் – ஐந்து டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – மூன்று டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மாதுளம் – கால் கப்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
வேர்க்கடலை பொடி – மூன்று டீஸ்பூன்
வெங்காயம் – ஐந்து டீஸ்பூன்
கிரீன் சட்னி – மூன்று டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, மாதுளம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறவும்.
பின், வெங்காயம், வேர்க்கடலை பொடி, பச்சை சட்னி, உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.