419
இது ஒரு பிரபலமான சிற்றுண்டி தென் இந்தியா முழுவதும். சட்னி சேர்த்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – இரண்டு கப்
துவரம் பருப்பு – ஒரு கப்
பயத்தம்பருப்பு – அரை கப்
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஐந்து (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
செய்முறை
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கலக்கி சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி கொள்ளவும்.
பிறகு, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வேகவைத்து கொள்ளவும்.
வெந்தவுடன் எடுத்து சூடாக சட்னிவுடன் பரிமாறவும்.