தேவையான பொருட்கள்
பட்டன் இட்லி – பத்து
வெங்காயம் – ஒன்று (வட்டமாக நறுக்கியது)
தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
இடித்த பூண்டு – இரண்டு பல்
எண்ணெய் – தேவையான அளவு
குடை மிளகாய் – ஒன்று (வட்டமாக நறுக்கியது)
கபாப் ஸ்டிக் – இரண்டு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடை மிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடை மிளகாய் ஒன்று ஆகியவற்றை ஒவொன்றாக சொருவி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.