512
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – கால் கிலோ
வேர்கடலை – 1௦௦ கிராம்
வெல்லம் – 1௦௦ கிராம்
எண்ணெய் – சிறிதளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கேழ்வரகு மாவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு, அடை போல் தட்டி தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்து கொள்ளவும்.
வேர்கடலையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
உரலில் வேர்கடலையை போட்டு உலக்கையால் குத்தவும்.
அதில், பொடியாக நறுக்கிய வெல்லம் சேர்த்து குத்தவும்.
பிறகு, சுட்ட அடையை புட்டு அதில் சேர்த்து நன்றாக குத்தி ஒன்றாக கிளறி உருண்டை போல் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.
சுவையான சத்து மிகுந்த உணவு தயார்.