392
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – அரை கப்
பால் – அரை லிட்டர்
குங்குமபூ – இரண்டு சிட்டிகை
சர்க்கரை – அரை கப்
மாம்பழம் – ஒரு கப் (நறுக்கியது) (தோல் நீக்கியது)
செய்முறை
தண்ணீர் சூடு செய்து பிறகு அதில் ஜவ்வரிசியை நன்றாக கழுவி போட்டு தட்டை மூடி அடுப்பை அனைத்து விடவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நறுக்கிய மாம்பழம், காய்ச்சிய பால், சர்க்கரை, குங்குமபூ ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும். பிறகு, அதில் ஜவ்வரசி சேர்த்து கலக்கி ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.