தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – கால் கப்
துவரம் பருப்பு – கால் கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
கேரட் – ஒன்று (நறுக்கியது)
பீன்ஸ் – மூன்று (நறுக்கியது)
பச்சை பட்டாணி – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, ஊறவைத்த பருப்பு, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, கொத்தமல்லி, புதினா, கரிவேபில்லை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
பிறகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போட்டு பொன்னிறமாக வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.
Mupparupu Vadai Recipe in English