967
தேவையான பொருட்கள்
புதிய எலுமிச்சை – ஆறு
மிளகாய் தூள் – ஐந்து தேகரண்டி
பெருங்காயம் – அரை தேகரண்டி
நலெண்ணெய் – 1௦௦ கிராம்
உப்பு – தேவைகேற்ப
வெந்தயம் – ஒரு தேகரண்டி
செய்முறை
எலுமிச்சம் பழத்தை ஓரளவிற்கு துண்டுகளாக நறுக்கவும்.
நறுக்கும் போது வரும் சாரை எடுத்து வைத்து கொள்ளவும். உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து கொள்ளவும்.
மறுநாள் நல்லெண்ணெய் ஊற்றி வைத்து விடவும்.
அதற்கு மறுநாள் கடுகு, வெந்தயம் மற்றும் பெருங்காயம் எண்ணையில் போட்டு பொரித்து ஊறுகாயில் சேர்த்து நன்கு கலக்கவும்.
Lemon Pickle Recipe in English