தேவையான பொருட்கள்
எள்ளு – அரை கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – மூன்று
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு தேகரண்டி (தேவையான அளவு)
செய்முறை
எள்ளு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக எடுத்து வறுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
வறுத்த எள்ளு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் அதனுடன் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும், இந்த பொடியை எள்ளு சாதம் தயாரிப்பதற்கு இப்பவுடரை பயன்படுத்தவும்.