648
தேவையான பொருட்கள்
அரிசி – 5௦௦ கிராம்
வெங்காயம் – 5௦ கிராம்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – ஐந்து பல்
மிளகு தூள் – 2௦ கிராம்
உப்பு – தேவையான அளவு
நெய் – இரண்டு தேகரண்டி
செய்முறை
அரிசியை பாதி வேக்காடு வேகவைத்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வதக்கவும், பின், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
அதன் பின் பாதி வேக வைத்த சாதத்தை போட்டு நெய் விட்டு கலக்கவும்.