தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்
பச்சரிசி – 2௦௦ கிராம்
உளுத்தம் பருப்பு – 1௦௦ கிராம்
தயிர் – 2௦ மில்லி லிட்டர்
முந்திரி – எட்டு
சீரகம் – ஒரு தேகரண்டி
இஞ்சி – ஐந்து கிராம்
உப்பு – தேவைகேற்ப
மிளகு – அரை தேகரண்டி
பச்சை மிளகாய் – இரண்டு
செய்முறை
அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
சிறிது நறநறவென்று கெட்டியாக அரைத்து கொண்டு உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடவும்.
மறுநாள் ஒரு கப் தயிர், முந்திரி, முழு மிளகு, சீரகம், நெய்யில் வறுத்த சிறுதுண்டு இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவில் சேர்க்கவும். டம்லரில் மாவை ஊற்றவும்.
இட்லி பாத்திரத்தில் இருபது நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
பலவகையான சட்னியுடன் பரிமாறலாம்.
Kanchipuram Idli recipe in English.
Image : Satya Nivas