தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – இரண்டு கப்
பச்சரிசி – ஒரு கப்
உளுத்தம் பருப்பு – ஒரு கப்
வெந்தயம் – மூன்று தேகரண்டி
கருப்பு மிளகு – அரை தேகரண்டி
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கருப்பு மிளகு சேர்த்து
மூன்று மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு, அனைத்தையும் அரைத்து கொள்ளவும் தோசை மாவு பதத்திற்கு.
பின், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து புளிக்கவிடவும் எட்டு மணிநேரம்.
பிறகு, தோசை கல்லில் ஊற்றி தோசை வாத்து எடுக்கவும், எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்.