223
தேவையான பொருட்கள்
பன்னீர் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு, பன்னீர் சேர்த்து கிளறி கரம் மசாலா துவி கலந்து கொதம்மல்லி துவி பரிமாறவும்.