தேவையான பொருட்கள்
நண்டு – அரை கிலோ
புளி – எலுமிச்சை பழம் அளவு
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் – மூன்று டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – 150 கிராம் (நறுக்கியது)
தக்காளி –150 கிராம் (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
நண்டை சுத்தம் செய்து நறுகிக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து அதில் மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், போதுமான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கரிவேபில்லை, காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
புளிக்கரைச்சலை ஊற்றி கொதித்ததும், நண்டை சேர்த்து குழம்பு திக்கான பதத்தில் வந்ததும் இறக்கிவிடவும்.