தேவையான பொருட்கள்
வரகு அரிசி மாவு – ஒரு கப் (வரகை கொரகொரப்பாக பொடிசெய்து கொள்ளவும்)
மில்க் சாக்லேட் பார் – மூன்று மேசைக்கரண்டி
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
முந்திரி, பாதாம் பொடித்தது – இரண்டு மேசைக்கரண்டி
பிளாஸ்டிக் (அ) சிலிக்கான் மோல்டு – ஒன்று
செய்முறை
கடாயில் வரகு அரிசி மாவு சேர்த்து லைட்டாக வறுத்து தனியாக வைத்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், மேலே கைப்பிடி உள்ள இன்னொரு பாத்திரத்தில் மில்க் சாக்லேட் பார் போட்டு கைவிடாமல் நன்றாக கிளறிவிடவும்.
உறுகி வந்தவுடன் முந்திரி, பாதாம் பவுடர், வரகு அரிசி மாவு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
பிறகு, வெண்ணெய் சேர்த்து கிளறவும் ஓரளவுக்கு கெட்டியானதுடன் மோல்டில் ஊற்றி குளிசாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவேண்டும்.
பிறகு, கத்தியின் உதவினால் எடுத்து தட்டில் வைக்க வேண்டும்.