292
தேவையான பொருட்கள்
ஆட்டு எலும்பு – அரை கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாதூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – கால் முடி (அரைக்கவும்)
வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)
தக்காளி – ஒரு கப் (நறுக்கியது)
எண்ணெய் – ஒரு குழிகரண்டி
தாளிக்க:
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கரிவேபில்லை – ஒரு கொத்து
செய்முறை
ஆட்டு எலும்பை சுத்தம் செய்து கொள்ளவும்.
எண்ணையைக் காய வைத்து சோம்பு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி இவற்றுடன் எலும்பையும் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், தேவைகேற்ப உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து நன்கு வேகவிடவும்.
நன்கு கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.