374
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – இரண்டு கப் (நறுக்கியது)
பால் – அரை கப்
சோல மாவு – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெள்ளை மிளகு தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை
நறுக்கிய வாழைத்துண்டை விழுதாக அரைத்து வடிகட்டிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வாழைத்தண்டு சாறு (ஒரு கப்) ஊற்றி ஒருகொதிவந்ததும்
பால் (அரை கப்) ஊற்றி இன்னொரு கொதிவிடவும்.
பிறகு சோல மாவை குளிர்ந்த நீரில் கரைத்து ஊற்றவும் பிறகு இன்னொரு கொதிவிட்டு உப்பு, வெள்ளை மிளகு தூள் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து எறக்கி சூடாக குடிக்கவும்.
உடல் எடை குறைய சிறந்த சூப் இது.