தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
சோயாபீன் – ஒரு கப் (கொதிக்கும் தண்ணீரில் பத்து நிமிடம் உறவைகவும் பிறகு வடிகட்டி வைத்துகொள்ளவும்)
வேகவைத்த உருளை கிழங்கு – இரண்டு (நறுக்கியது)
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – அரை டீஸ்பூன்
சீரக தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் –தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், ஊறவைத்து வடிகட்டிய சோயாபீன், வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பொன்னிறமாக வரும்வரை வறுத்து எடுக்கவும்.
அதிக புரத சத்து உள்ள உணவு.குழந்தைகளுக்கு மிக பிடித்த உணவு.
2 comments
healthy and tasty recipe
Super recipes. thanks awesome cuisine for giving us in tamil. My mom can read easily .