தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெங்காயம் – இரண்டு(நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
காரட் – சிறிதளவு (திருவல்)
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
இட்லி மாவு –மூன்று கப் (புளித்த மாவு)
எண்ணெய் – பணியாரம் சுட
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, காரட் திருவல்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு இட்லி மாவில் அந்த மசாலாவை கொட்டி கலக்கி பணியாரம் கல்லில் ஊற்றவும் பின்னர் அதன்மேலே எண்ணெய் ஊற்றவும்,இரண்டு நிமிடகள் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றவும். வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
புதினா சட்னி உடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.