Home Tamil சீரக சம்பா கீரை சாதம்

சீரக சம்பா கீரை சாதம்

Published under: Tamil

சீராக சம்பா கீரை சாதம் ஒரு மிகவும் ஆரோக்கியமான உணவு. மதிய உணவு அல்லது ஏதாவது சிறப்பு தருணம் போது செய்யலாம்

Seeraga Samba Spinach Rice

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா – வடித்த சாதம் (ஒரு கப்)
  • எண்ணெய் – ஒரு தேகரண்டி
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • வெந்தயம் – கால் டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • கரிவேபில்லை – சிறிதளவு
  • இஞ்சி துருவல் – சிறிதளவு
  • தக்காளி – ஒன்று (நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவைகேற்ப
  • அரை கீரை – அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
  • வேகவைத்த துவரம் பருப்பு – கால் கப்

செய்முறை

  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு, இஞ்சி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின், மிளகாய் தூள், துவரம் பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து சீரக சம்பா சாதம் சேர்த்து நன்றாக கிளறி இரண்டு நிமிடம் கழித்து பரிமாறவும்.

image via

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.