ஒரு சுவையான மற்றும் வேறுபட்ட மாலை சிற்றுண்டி.
Image courtesy: The Hindu
தேவையான பொருட்கள்
அரிசி – அரை கிலோ
உளுத்தம் பருப்பு – அரை பிடி
தயிர் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – சிறிதளவு
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை இரண்டையும் தயிரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, கழுவி அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அதில் பொடியாக நறுக்கிய கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.