
Image via Hema Raghavendra
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – அரை கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
கேரட், பீன்ஸ், குடை மிளகாய், கோஸ் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைகேற்ப
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய் பால் – நான்கு டீஸ்பூன்
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – மூன்று கப்
செய்முறை
கடாயில் ஓட்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரிஞ்சி இலை, கேரட், பீன்ஸ், கோஸ், குடை மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வறுத்த ஓட்ஸ், தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும்.
பிறகு, கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து மூடி வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி மிளகு தூள், தேங்காய் பால், கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.
உடல் இலைக்க மிக சிறந்த உணவு இது.
Oats Vegetable Soup Recipe in English