403
இளநீர் கொண்டு ஒரு வித்தியாசமான சூப்.
தேவையான பொருட்கள்
இளநீர் வழுக்கை – கால் கப்
இளநீர் – ஒரு கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கேரட் – இரண்டு டீஸ்பூன்
பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் – கால் டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
காய்ச்சி, ஆறவைத்த பால் – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
இளநீர் வழுக்கை மற்றும் கால் கப் இளநீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிய பின், அரைத்த விழுது, வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள், உப்பு மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
பிறகு, இறக்கி, பால் ஊற்றி கிளறி பரிமாறவும்.