Home Tamil ஹரியானா ஃபிஷ் மசாலா

ஹரியானா ஃபிஷ் மசாலா

Published under: Tamil
Fish Curry

Note: image is for illustration purposes only and not that of the actual recipe.

தேவையான பொருட்கள்

வஞ்சரம் மீன் – நான்கு துண்டு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – ஒன்று

புதினா – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

லெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன்

தயிர் – ஒரு டீஸ்பூன்

ஆலீவ் ஆயில் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – மூன்று டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் வஞ்சரம் மீன், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.

பின், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், லெமன் ஜூஸ், தயிர், ஆலீவ் ஆயில் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின், அதில் கரம் மசாலா, உப்பு, அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின், அதில் ஊறவைத்த மீன் சேர்த்து கலந்து எட்டு நிமிடம் சிம்மில் வைத்து நடுவில் கலந்து விட்டு, வெந்தவுடன் இறக்கவும்.

image via

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.