390
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – அரை கப் (பனிரெண்டு மணி நேரம் ஊறவைத்தது)
வெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
கிரீம் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
கடாயில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின், ஊறவைத்த பச்சை பட்டாணி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின், கிரீம், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மிக்ஸியில் அரைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொத்தமல்லி தூவி, அரை டீஸ்பூன் கிரீம் ஊற்றி பரிமாறவும்.
Green Peas Soup Recipe in English