348
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை இலை – ஒரு கப் (சுத்தம் செய்தது)
முட்டை – ஒன்று (உடைத்து நன்றாக அடித்து கொள்ளவும்)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – இரண்டு
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, அதில் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூன்று நிமிடம் வேகவிடவும்.
பின், அடித்த முட்டை சேர்த்து நன்றாக கிளறி முட்டை வெந்ததும் இறக்கி விடவும்.