தேவையான பொருட்கள்
சிக்கன் – கால் கிலோ
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – இரண்டு
சின்ன வெங்காயம் – ஐந்து
கரிவேபில்லை – சிறிதளவு
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
அரைக்க:
தேங்காய் துருவல் – கால் கப்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஐந்து
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – இரண்டு டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை
ஒரு கிண்ணத்தில் சிக்கன் மற்றும் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கலந்து இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, சின்ன வெங்காயம், கரிவேபில்லை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, சிக்கன் கலவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து பதினைந்து நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேகவிடவும்.
நன்கு தொக்கு போல் வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.