தேவையான பொருட்கள்
கேழ்வரகு – இரண்டு கப்
உளுந்து – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கப்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
காலிஃபிளவர் – அரை கப்
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
உளுந்தை நாளு மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
முதல் நாள் இரவே கேழ்வரகு மாவு, அரிசி மாவு, அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறி காய் வேகும்வரை சிம்மில் வைத்து வெந்தவுடன் கொத்தமல்லி துவி இறக்கவும்.
தவாவில் மாவை ஊற்றி வேகவிடவும் வெந்ததும் நடுவில் காலிஃபிளவர் மசாலாவை வைத்து இரண்டாக மடித்து எடுக்கவும்.
Masala Dosai Recipe in English