311
தேவையான பொருட்கள்
தனியா – இரண்டு டீஸ்பூன்
நெய் – நான்கு டீஸ்பூன்
மிளகு – இருபது
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சுக்கு – சின்ன துண்டு நசுக்கி கொள்ளவும்
கரிவேபில்லை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
கடாயை சூடு செய்து கரிவேபில்லை, மிளகு, சீரகம், தனியா, சுக்கு ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
அந்த கலவை ஆறியதும் மிக்ஸ்யில் போட்டு நைசாக அரைத்து, தேவைகேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
தேவைப்படும் பொழுது பயன்படுத்தி கொள்ளலாம்.