தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – இரண்டு கப்
கொத்துக்கறி – 3௦௦ கிராம்
தயிர் – இரண்டு கப்
வெங்காயம் – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
லவங்கம் – ஐந்து
ஏலக்காய் – ஐந்து
மிளகு – அரை டீஸ்பூன்
பாதாம் – கால் கப்
பிஸ்தா – கால் கப்
காய்ந்த திராட்சை – அரை கப்
குங்குமப்பூ – அரை டீஸ்பூன்
நெய் – ஐந்து டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஐந்து டேபிள் ஸ்பூன் நெய்விடவும்.
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, பாதாம், பிஸ்த, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து, சுத்தம் செய்த கீமாவை சேர்த்து வதக்கவும்.
போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கரியை வேகவிடவும்.
ப்ரஷர் போனதும் திறந்து, பாசுமதி அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். மட்டனும், அரிசியும் வெந்ததும், மூடியை திறந்து, ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.