தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
முட்டை – ஒன்று
எண்ணெய் – தேவையான அளவு
சக்கரை – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் பவுடர் – அரை டீஸ்பூன்
தேங்காய் திருவல் – இரண்டு டீஸ்பூன்
முந்திரி, பாதாம், திராட்சை, பெர்சம்பழம் – இரண்டு டீஸ்பூன் (பொடி செய்தது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.
பின், முட்டையை நன்றாக அடித்து கொண்டு அதில் கலந்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
பிறகு, தவாவை சூடாகி தோசை போல் ஊற்றி கொள்ளவும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொண்டு பொன்னிறம் வந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பிறகு, அதன் மேல் சிறிதளவு சக்கரை, ஏலக்காய் பொடி, தேங்காய் திருவல், பொடி செய்த வால்நட்ஸ் துவி ரோல் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.பிறகு, எடுத்து சூடாக பரிமாறவும்.