தேவையான பொருட்கள்
மெக்ரோன் – கால் கப் (வேகவைத்தது)
துவரம்பருப்பு – அரை கப் (வேகவைத்தது)
பச்சை குடைமிளகாய் – ஒன்று (நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – மூன்று
புளி சிறிய உருண்டை –அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து,சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை ஒவ்ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி புளி கரைச்சல், தண்ணீர் தேவையான அளவு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு மெக்ரோன் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்கவிட்டு துவரம்பருப்பு, கொத்தமல்லி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு எறக்கி பரிமாறவும்.