460
தேவையான பொருட்கள்
பால கீரை – அரை கட்டு (சுத்தம் செய்தது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
இஞ்சி விழுது – கால் டீஸ்பூன்
கோதுமை மாவு – ஐந்து கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – இரண்டு டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிட்டு பால கீரையை போட்டு மூன்று நிமிடம் வேகவிடயும்.
பிறகு தண்ணீர் வடித்து கீரையுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து விழுதாக அரைத்து வைத்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய், அரைத்த விழுது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு சப்பாத்தி திரட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.