தேவையான பொருட்கள்
சாதம் – இரண்டு கை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
அரைக்க
வெங்காயம் – இரண்டு கை அளவு
பூண்டு – பத்து பல்
மிளகு – ஒரு ஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஆறு நம்பர்
புளிச்ச கீரை – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மேல சொல்லப்பட்டுள்ள அரைக்க கொடுக்கப்பட்ட எல்லாவற்றியும் அரைத்து கொள்ளவும் (அம்மியில் அரைத்தால் இன்னும் ஜோர்).
ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள விழுதை இதனுடன் சேர்த்து வதக்கவும்.
உப்பு கொஞ்சம் சேர்க்கவும். (புளிச்ச கீரை என்பதால் உப்பு கொஞ்சம் அளவாக’ போடவும்)
இதனுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளவுரவும்.
சூடான, கலகலான புளிச்ச கீரை சாதம் தயார்.
1 comment
Thanks swesome cuinine for a lovely recipe. We did it and came out fantastic :) keep posting