பிரட் ஆம்லெட்

Tamil

பிரெட் ஆம்லெட் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவும் கூட. குறிப்பாக சென்னையில் பிரட் ஆம்லெட் கிடைக்காத chat shop களே நம்மால் காண முடியாது. மாலை நேரங்களில் பிரட் ஆம்லெட்க்காகவே ஒரு கூட்டம் chat shop களில் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். வாடிக்கையாளர்களை கவர விற்பனையாளர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று பிரெட் ஆம்லெட்டுக்கு என பிரத்தியேகமாக தனி chat shop களை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த கடைகளில் வித்தியாச வித்தியாசமான பிரெட் ஆம்லெட்டுகளை நம்மால் சுவைக்க முடியும்.

bread omelette - பிரட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை செய்வதற்கு வெகு குறைவான பொருட்கள் மற்றும் குறைந்த நேரமே எடுக்கும். இதை பிரட் மற்றும் முட்டையை கொண்டு செய்வதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. மேலும் சமைக்க கற்றுக் கொள்பவர்கள் கூட இதை மிகவும் எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அத்தோடு இவை அவசரகால கட்டங்களில் குழந்தைக்கு ஸ்கூலுக்கு நேரமாகி விட்டாலோ அல்லது ஆபிசுக்கு நேரமாகி விட்டாலோ, குறுகிய நேரங்களில் செய்யக்கூடிய உணவுகளில் இல்லத்தரசிகளின் டாப் சாய்ஸாக இருக்கிறது. குறுகிய நேரத்தில் மிகவும் சத்தான ஒரு உணவை செய்ய முடியுமென்றால் இருக்காதா பின்ன?

இப்பொழுது கீழே பிரட் ஆம்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

bread omelette 380x380 - பிரட் ஆம்லெட்
0 from 0 votes

பிரட் ஆம்லெட் ரெசிபி

அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாலை நேர சிற்றுண்டி
Prep Time10 mins
Cook Time10 mins
Total Time20 mins
Course: Snack
Cuisine: Indian, South Indian

பிரட் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்

 • 2 பிரட்
 • 3 முட்டை
 • 1 பெரிய வெங்காயம்
 • 2 பச்சை மிளகாய்
 • 1/2 எலுமிச்சம் பழம்
 • 1 ஸ்லைஸ் சீஸ்
 • 2 மேஜைக்கரண்டி வெண்ணெய்
 • 1 1/2 கை அளவு புதினா
 • 1 1/2 கை அளவு கொத்தமல்லி
 • தேவையான அளவு மிளகாய் தூள்
 • தேவையான அளவு மிளகு தூள்
 • தேவையான அளவு கெட்சப்
 • தேவையான அளவு உப்பு
 • தேவையான அளவு எண்ணெய்

பிரட் ஆம்லெட் செய்முறை

 • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் புதினாவை நன்கு பொடியாக நறுக்கி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும்.
 • அடுத்து நாம் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லியில் இருந்து ஒரு கை அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
 • தண்ணீர் அதிகம் சேர்த்து விடக்கூடாது புதினா சட்னி சிறிது கெட்டியாக தான் இருக்க வேண்டும் அப்பொழுது தான் அதை நாம் பிரட்டில் தடவ முடியும்.
 • பின்பு ஒரு bowl ல் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து அதை நன்கு அடித்து கொள்ளவும்.
 • பின்னர் அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து மீண்டும் ஒரு முறை அதை நன்கு கலக்கி விடவும்.
 • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை போட்டு அதை உருக விடவும்.
 • வெண்ணெய் உருகியதும் அதில் பிரட்டை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் லைட்டாக டோஸ்ட் ஆனதும் அதை மறு புறம் திருப்பி போட்டு லைட்டாக டோஸ்ட் செய்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (பிரட்டை அதிகமாக டோஸ்ட் செய்யக்கூடாது.)
 • அடுத்து அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் கலக்கி வைத்திருக்கும் முட்டையை நன்கு பரவலாக ஊற்றி விடவும்.
 • பின்பு நாம் டோஸ்ட் செய்து வைத்திருக்கும் 2 பிரட்டையும் எடுத்து ஒவ்வொன்றாக இந்த முட்டையில் வைத்து லேசாக அதை அழுத்தி விடவும்.
 • பின்னர் முட்டை ஒரு புறம் வெந்ததும் பிரட்டோடு கவனமாக அதை திருப்பி போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
 • பின்பு முட்டையை திருப்பி போட்டு நாம் அரைத்து வைத்திருக்கும் புதினா சட்னியை ஒரு மேஜைக்கரண்டியின் மூலம் தடவி பிரெட்டின் மேலே தடவி விடவும்.
 • புதினா சட்னியை தடவிய பின் அதன் மேலே ஒரு ஸ்லைஸ் சீஸ்ஸை வைத்து 2 ஓரங்களில் இருந்து முட்டையை மடித்து பின்பு 2 பிரட்டையும் ஒன்றின் மேல் ஒன்று வருமாறு மடித்து விட்டு அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
 • அடுத்து அதை பாதியாக வெட்டி அதன் மேலே கெட்சப்பை ஊற்றி சுட சுட பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Bread Omelette Recipe in English