Home Tamil அத்தோ

அத்தோ

Published under: Tamil
சமைக்கத்தெரியாதவர்கள் கூட சிரமமின்றி செய்யக்கூடிய உணவு தான் இது.
Atho

Athoke அல்லது அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. அதில் Laphet thoke, Ngapi thoke, Thayet chin thouk, Tophu thoke, Khaukswe thoke, Gyin thoke, மற்றும் Nan gyi thohk மிகவும் பிரபலமானவை. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் அங்கிருக்கும் சமையல் முறைக்கேற்ப பல மாற்றங்களோடு செய்யப்படுகிறது. அவ்வகையில் இங்கு நாம் காண இருப்பது சென்னையில் இருக்கும் அத்தோ கடைகளில் செய்யப்படும் அத்தோ முறை. இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு அதற்கு மாலை நேரங்களில் அத்தோ கடைகளில் நாம் காண கூடிய கூட்டமே சாட்சி.

Atho

பர்மா உணவு முறையை சார்ந்த இவை மெல்ல மெல்ல பர்மா மக்கள் இடம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பிரபலமடைந்தது.  அதற்கு காரணம் இதனின் வித்தியாசமான சுவை தான். இதை விரும்புபவர்கள் பெரும்பாலும் இதை அத்தோ கடைகளில் தான் வாங்கி சுவைக்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வெகு சுலபமாக செய்து விடலாம். சமைக்கத் தெரியாதவர்கள் கூட சிரமமின்றி செய்யக்கூடிய உணவு தான் இது. மேலும் நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று உணவும் கூட.

இப்பொழுது கீழே அத்தோ செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Atho
3.50 from 4 votes

அத்தோ ரெசிபி

சமைக்கத்தெரியாதவர்கள் கூட சிரமமின்றி செய்யக்கூடிய உணவு தான் இது.
Prep Time20 mins
Cook Time20 mins
Total Time40 mins
Course: Main Course, Snack
Cuisine: Burmese, Indian

அத்தோ செய்ய தேவையான பொருட்கள்

  • 400 கிராம் நூடுல்ஸ்
  • 3 பெரிய வெங்காயம்
  • 1/2 முட்டைகோஸ் சின்னது
  • 6 பல் பூண்டி
  • 1 காஞ்ச மிளகாய்
  • 2 தட்டை
  • 1/2 எலுமிச்சம் பழம்
  • 1 மேஜைக்கரண்டி பொட்டு கடலை மாவு
  • 1 மேஜைக்கரண்டி உப்பு தண்ணீர்
  • 1 மேஜைக்கரண்டி புளி தண்ணீர்
  • 1/4 மேஜைக்கரண்டி கேசரி பவுடர்
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி

அத்தோ செய்முறை

  • முதலில் வெங்காயம், முட்டைக்கோஸ், பூண்டு, கொத்தமல்லி, உப்பு தண்ணீர், மற்றும் புளி தண்ணீரை தயார் செய்து, மற்றும் காஞ்ச மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் நூடுல்ஸை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு பிரித்து விட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.
  • நூடுல்ஸ் பாதி வெந்தவுடன் அதில் கேசரி பவுடரை போட்டு நன்கு கலந்து விடவும். (கேசரி பவுடர் வேண்டாம் என்று நினைத்தால் இதை தவிர்த்து விடலாம்.)
  • 15 நிமிடத்திற்கு பிறகு நூடுல்ஸ் வெந்ததை உறுதி செய்த பின் அடுப்பை அணைத்து விட்டு அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு நூடுல்ஸை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி நூடுல்ஸை நன்கு பிரட்டி விட்ட பின் அதை சிறிது நேரம் ஆற விடவும். (இவ்வாறு செய்தால் தான் நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தில் பாதி அளவை போட்டு அதை நன்கு பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து அதே pan ல் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அது சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பூண்டையும் நன்கு பொன் நிறம் வரும் வரை பொரித்து எடுத்து எண்ணெய்யோடு ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்னர் நாம் செய்து வைத்திருக்கும் நூடுல்ஸை எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.
  • பின்பு அதில் மீதமுள்ள வெங்காயம், முட்டைகோஸ், அவரவர் காரத்திற்கேற்ப நாம் அரைத்து வைத்திருக்கும் காஞ்ச மிளகாய், பொட்டு கடலை மாவு, புளி தண்ணீர், மற்றும் உப்பு தண்ணீர் சேர்த்து கைகளின் மூலம் அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வெங்காயம், எண்ணெய்யோடு எடுத்து வைத்திருக்கும் பூண்டு, கொத்தமல்லி, மற்றும் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு அதையே கைகளின் மூலம் நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் 2 தட்டைகளை நன்கு நொறுக்கி போட்டு அதை மீண்டும் நன்கு கலந்து விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் சத்தான அத்தோ தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.