சேமியா புலாவ்

By Praveen Kumar
சேமியா புலாவ் மிகவும் சுவையான மற்றும் ரிச்சான ஒரு உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி சொற்பமான பொருட்களை கொண்டு குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இவை ஒரு கச்சிதமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

எப்பொழுதுமே ஏதாவது வித்தியாசமான மற்றும் சுவையான உணவை நாம் சுவைக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் யாருக்கு தான் இல்லாமல் இருக்கும்? இல்லை அந்த ஆர்வம் குறைந்து தான் போய்விடுமா? அதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு என்று நம்மில் பல பேர் எந்தவித தயக்கமும் இன்றி ஒப்புக் கொள்வோம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது சேமியாவை கொண்டு வித்தியாசமான முறையில் செய்யப்படும் சேமியா புலாவ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சேமியா புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Semiya Pulao
Semiya Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

ரிச்சான உணவுகளில் மிக எளிதில் செய்யக்கூடிய உணவு என்றால் எந்தவித சந்தேகம் இன்றி புலாவ் என்று நாம் கூறலாம். அதில் இந்த வித்தியாசமான சேமியா புலாவ் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது மட்டுமின்றி அதன் பேரை கேட்ட உடனே கேட்பவர்களை ஆச்சரியமும் அடைய செய்து விடும். நம்ப வில்லையா? ஒரு சின்ன பரிசோதனையாக உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் இந்த வாரம் நீங்கள் சேமியா புலாவை செய்யப் போகிறீர்கள் என்று சொல்லிப் பாருங்கள். பின்னர் அவர்களது ரியாக்ஷனை கவனியுங்கள் குறிப்பாக சுட்டீஸ்களின் ரியாக்ஷனை கவனியுங்கள் நாங்கள் சொன்னது உண்மையா பொய்யா என்று உங்களுக்கே தெரிந்து விடும். நீங்கள் இந்த சேமியா புலாவை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

சேமியா புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் சேமியா, முட்டை, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகு தூள், ஏலக்காய், இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, மற்றும் பிரியாணி இலை போன்ற மசாலா பொருட்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து மிக மணமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். நிச்சயம் இதை உங்கள் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

இவ் உணவின் வரலாறு:

வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் புலாவ் முதல் முதலாக எட்டாம் நூற்றாண்டின் போது Abbasid சாம்ராஜ்யத்தில் தான் செய்யப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் புலாவில் இருந்து தான் பிரியாணியே தோன்றி இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முகலாய படையெடுப்பின் போது அவர்கள் கைப்பற்றிய தேசங்களில் பிரபலமடைய தொடங்கி இருக்கிறது. கால போக்கில் மக்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சமையல் முறைக்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டு மற்றும் அவர்களுக்கு விருப்பமான பொருட்களை சேர்த்து புலாவை செய்து சுவைக்க தொடங்கி இருக்கின்றனர். அதுவே இந்த சேமியா புலாவ் உதயமாகி இருப்பதற்கான காரணம்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

சேமியா புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 30 லிருந்து 35 நிமிடம் எடுக்கும்.

சேமியா புலாவை முழுமையாக சுமார் 55 நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

சேமியா புலாவை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அதை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ஒருநாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

சேமியா புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் சேமியாவில் இரும்பு சத்து, நார் சத்து, கார்போஹைட்ரேட், மற்றும் கால்சியம் இருக்கிறது. இவை எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் உபயோகிக்கும் பீன்ஸில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், நார் சத்து,  மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, மேங்கனீஸ், விட்டமின் K, C, மற்றும் A உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, செரிமான அமைப்பை சீர் செய்ய, மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் வெங்காயத்தில் நார் சத்து, தண்ணீர் சத்து, புரத சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் தக்காளியில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

Semiya Pulao
No ratings yet

சேமியா புலாவ்

சேமியா புலாவ் மிகவும் சுவையான மற்றும் ரிச்சான ஒரு உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி சொற்பமான பொருட்களை கொண்டு குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இவை ஒரு கச்சிதமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time20 minutes
Cook Time50 minutes
Total Time1 hour 10 minutes
Course: Main Course
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup சேமியா
  • 5 முட்டை
  • 2 கேரட்
  • 4 பீன்ஸ்
  • 1 கை பச்சை பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1/4 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1/2 tsp மிளகு தூள்
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 இலவங்கப்பட்டை
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 பிரியாணி இலை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பீன்ஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி, கேரட்டை துருவி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் சேமியாவை போட்டு சேமியா நன்கு பொன் நிறம் ஆகும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதே pan னில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் ஏலக்காய், இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, மற்றும் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நாம் நெருக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  • இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் அரை மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக கலந்து விட்டு சேமியா நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.
  • சேமியா நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதை கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் விட்டு அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் கலந்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி அதை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு நாம் வதக்கி வைத்திருக்கும் முட்டையை நாம் செய்து வைத்திருக்கும் சேமியா புலாவில் சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக கிளறி விடவும்.
  • அடுத்து அதன் மேலே நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

சேமியா புலாவில் நாம் கட்டாயம் முட்டையை சேர்த்தாக வேண்டுமா?

அப்படியெல்லாம் ஏதுமில்லை. நீங்கள் சைவப்பிரியராக இருந்தால் அல்லது முட்டை உங்களுக்கு பிடிக்காது என்றால் நீங்கள் தாராளமாக அதை தவிர்த்து விடலாம்.

சேமியா புலாவில் நாம் வேறு ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?

தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பம் என்றால் உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேமியா புலாவை இன்னும் காரமாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் பிடிக்கும் என்றால் நீங்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது உங்களது காரத்திற்க்கு ஏற்ப கூடுதலாக அரை அல்லது ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

சேமியா புலாவிற்கு ஏற்ற சைடிஷ்கள் என்னென்ன?

பன்னீர் 65, மஷ்ரூம் 65, பன்னீர் டிக்கா, மஷ்ரூம் மஞ்சூரியன், வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை போன்ற சைடிஷ்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் லாலிபாப், சிக்கன் மஞ்சூரியன் போன்ற சைடிஷ்கள் அருமையாக இருக்கும்.

 

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment