2.6K
ராஜ்மா சுண்டல் ஒரு எளிதான, ஆரோக்கியமான மற்றும் சுவையான தென்னிந்திய உணவு.
ராஜ்மா சுண்டல் செய்முறையானது நவராத்திரிக்கான சுண்டல் வகைகளில் எளிதான மற்றும் சுவையான நைவேத்யம் ஆகும். காலை உணவு அல்லது மாலை சிற்றுண்டியாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் இதை லேசான உணவாக உண்ணலாம்.
ராஜ்மா சுண்டல்
ராஜ்மா சுண்டல் ஒரு எளிதான, ஆரோக்கியமான மற்றும் சுவையான தென்னிந்திய உணவு.
தேவையான பொருட்கள்
- 1 கப் ராஜ்மா ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது
- 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
- தேவைகேற்ப உப்பு
பொடி செய்ய:
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 காய்ந்த மிளகாய்
- 1 டீஸ்பூன் தேங்காய் துண்டு
தாளிக்க:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 பச்சை மிளகாய் நறுக்கியது
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை
- போடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், ராஜ்மா, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும்.
- பிறகு, அதில் பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
செய்முறை வீடியோ
Rajma Sundal Recipe in English
Image credit: Viji Athreye