உருளைக்கிழங்கு சாட்

By Praveen Kumar
உருளைக்கிழங்கு சாட் ஒரு அட்டகாசமான மாலை நேர சாட் ஆகும். இதை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே குறைந்த நேரத்தில் எந்தவித சலிப்பும் இன்றி நாம் செய்துவிடலாம்.

சாட் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர உணவு ஆகும். சாட்களில் பல வகை இருக்கிறது. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் உருளைக்கிழங்கு சாட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான உருளைக்கிழங்கு சாட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Aloo Chaat
Aloo Chaat / Potato Chaat

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

உருளைக்கிழங்கு சாட்டை எந்தவித சமையல் அனுபவம் இல்லாதவர் கூட முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். என்றாவது மாலை நேரத்தில் நாம் சோர்வாக இருக்கும் பொழுது ஏதேனும் சுவையான மாலை நேர உணவை சுவைக்க வேண்டும் என்று தோன்றினால் உங்களின் சாய்ஸ் ஆக இந்த உருளைக்கிழங்கு சாட் இருப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இதை மிக எளிதில் நாம் செய்துவிடலாம். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

உருளைக்கிழங்கு சாட் செய்ய நாம் முதலில் ஸ்பெஷலான புளி சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னியை தயார் செய்வோம். நாம் உருளைக்கிழங்கு சாட் செய்ய பயன்படுத்தும் வறுத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா, பிளாக் சால்ட், மற்றும் நாம் தயாரித்த ஸ்பெஷலான சட்னிகளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து அட்டகாசமாக இருக்கும். அதனுடன் நாம் சேர்க்கும் ஓமப்பொடி மற்றும் மாதுளை பழ விதைகளுடன் சேர்ந்து வேற லெவல்லான சுவைக்கு சென்று விடும்.

சில குறிப்புகள்:

உருளைக்கிழங்கை நாம் நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டு விட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

உருளைக்கிழங்கு சாட் இந்திய துணை கண்டத்தில் உதயமானதாக வரலாற்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதை வட இந்தியாவில் ஆலு சாட் என்று அழைக்கிறார்கள். ஆலு என்றால் இந்தி மொழியில் உருளைக்கிழங்கு என்று பொருள், சாட் என்றால் சுவைப்பது என்று பொருள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் இந்த உருளைக்கிழங்கு சாட்டை மக்கள் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

உருளைக்கிழங்கு சாட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

உருளைக்கிழங்கு சாட்டை முழுமையாக சுமார் 40 நிமிடத்தில் இருந்து 45 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு சாட்டை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ஒரு நாள் வரை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம். இருப்பினும் இதை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

உருளைக்கிழங்கு சாட் செய்ய நாம் உபயோகிக்கும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, B6, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் வெங்காயத்தில் புரத சத்து, தண்ணீர் சத்து, நார் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

இதில் நாம் உபயோகிக்கும் மாதுளை பழ விதைகளில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை இருதயம், மூளை, மற்றும் சிறுநீர்ப்பாதை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்க்கு உதவுகிறது.

Aloo Chaat
No ratings yet

உருளைக்கிழங்கு சாட்

உருளைக்கிழங்கு சாட் ஒரு அட்டகாசமான மாலை நேர சாட் ஆகும். இதை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே குறைந்த நேரத்தில் எந்தவித சலிப்பும் இன்றி நாம் செய்துவிடலாம்.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Appetizer, Main Course, Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 3 உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கை அளவு மாதுளை பழ விதைகள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 10 கொட்டை நீக்கிய பேரிச்சம் பழம்
  • 1 துண்டு புளி
  • 1 1/4 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 3/4 tsp சாட் மசாலா
  • 1 tsp சீரக தூள்
  • 1/2 tsp மல்லி தூள்
  • 1/2 tsp இஞ்சி பொடி
  • 2 tsp பொடித்த வெல்லம்
  • 1/2 tsp பிளாக் சால்ட்
  • 1 எலுமிச்சம் பழம்
  • தேவையான அளவு ஓமப் பொடி
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு புதினா
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, மற்றும் பேரிச்சம் பழத்தை நறுக்கி, மாதுளை பழத்தை உரித்து, புளியை சுமார் அரை கப் அளவு தண்ணீரில் கரைத்து வைத்து, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை போட்டு அதை நன்கு ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் இரண்டு நிமிடம் வரை வேக விடவும்.
  • இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் அரை மேஜைகரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி சீரக தூள், அரை மேஜைகரண்டி ப்ளாக் சால்ட், அரை மேஜைகரண்டி உப்பு, மல்லி தூள், பொடித்த வெல்லம், மற்றும் இஞ்சி பொடியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் மூன்று நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • மூன்று நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை கீழே இறக்கி வைத்து சற்று நேரம் ஆற விடவும்.
  • அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, ஒரு கை அளவு புதினா, ஒரு கை அளவு கொத்தமல்லி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழசார், கால் மேஜைகரண்டி அளவு உப்பு, மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் மூன்று மேஜைகரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அது அனைத்து புறங்களிலும் சற்று பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அந்த pan லில் உள்ள எண்ணெய்யை வடித்து விட்டு அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை மீண்டும் போடவும்.
  • பின்பு அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி அளவு சீரக தூள், அரை மேஜைகரண்டி அளவு சாட் மசாலா, நாம் செய்து வைத்திருக்கும் புளி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டி, மற்றும் கொத்தமல்லி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  • பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ஒரு சிட்டிகை அளவு காஷ்மீரி மிளகாய் தூள், மற்றும் ஒரு சிட்டிகை அளவு சாட் மசாலாவை தூவி விடவும்.
  • அடுத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் புளி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டி, மற்றும் கொத்தமல்லி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டியை ஊற்றவும்.
  • பின்பு அதன் மேலே கொஞ்சம் ஓமப் பொடி மற்றும் நாம் உரித்து வைத்திருக்கும் மாதுளை பழ விதைகளை போட்டு பரிமாறவும்.

 

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

உருளைக்கிழங்கு சாட் செய்ய நாம் கூடுதலாக ஏதேனும் காய்கறிகளை பயன்படுத்தலாமா?

உருளைக்கிழங்கு சாட் வெறும் உருளைக்கிழங்கை கொண்டுதான் செய்யப்படுகிறது. இதை இப்படி சாப்பிடுவதற்க்கே மிக அற்புதமாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கூடுதல் காய்கறிகள் வேண்டும் என்றால் வேக வைத்த பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு சாட்டை இன்னும் காரமாக செய்வது எப்படி?

உங்களுக்கு கூடுதல் காரம் வேண்டும் என்றால் உங்களது காரத்திற்க்கு ஏற்ப நாம் கொத்தமல்லி சட்னியை அரைக்கும் பொழுது கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக அரை அல்லது ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment