Home Tamil உருளைக்கிழங்கு சமோசா

உருளைக்கிழங்கு சமோசா

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
சமோசா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும்விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டி.

சமோசா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. சமோசாக்களில் பல வகை உண்டு. அதில் வெஜிடபிள் சமோசா, சிக்கன் சமோசா, ஆனியன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, காலிஃப்ளவர் சமோசா, ஃபிஷ் சமோசா, மற்றும் முட்டை சமோசா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது உருளைக்கிழங்கு சமோசா. மாலை நேரங்களில் சுட சுட சமோசாவை புதினா சட்னியில் தொட்டு உண்ணும் சுவையே தனி தான்.

Aloo Samosa

பொதுவாகவே சமோசா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டி. மாலை நேரங்களில் chat கடைகளில் மற்றும் சுட சுட சமோசாவை செய்து விற்க்கும் கடைகளில் அலைமோதும் கூட்டமே அதற்கு சாட்சி. அனைவருக்கும் பிடித்தமான இந்த சமோசாவை நம் வீட்டிலேயும் செய்து சுவைக்கலாம்.

சமோசா செய்வதற்கு நாம் மாவை கூம்பு வடிவிற்கு உருட்டும் போது சிறிது கவனமாக உருட்டிவிட்டால் போதும் இதை நாம் வெகு எளிதாக செய்து விடலாம். இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்வதனால் நம் குழந்தைகளுக்கும் எந்த ஒரு அச்சமுமின்றி இந்த உருளைக்கிழங்கு சமோசாவை நாம் கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே உருளைக்கிழங்கு சமோசா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Aloo Samosa
5 from 1 vote

உருளைக்கிழங்கு சமோசா

சமோசா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும்விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டி.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • ½ கப் கோதுமை மாவு
  • ½ கப் மைதா மாவு
  • 3 உருளைக்கிழங்கு
  • ¼ கப் பச்சை பட்டாணி
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பூண்டு பல்
  • 1 இஞ்சி துண்டு
  • 1 மேஜைக்கரண்டி ஓமம் தூள்
  • ½ மேஜைக்கரண்டி சீரகம்
  • ½ மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • ½ மேஜைக்கரண்டி சீரக தூள்
  • ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்
  • ½ மேஜைக்கரண்டி ஆம்சூர் தூள்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து லேசாக ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.
  • பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ஓமம் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை பிணைந்து அதை நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  • பின்னர் அதை ஒரு மூடி போட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் சீரகம், நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, மல்லி தூள், கரம் மசாலா, சீரக தூள், மிளகு தூள், ஆம்சூர் தூள், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • அது வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • பின்பு அதை சப்பாத்தி கல்லில் வைத்து அதை சிறிது அடர்த்தியாக சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதை பாதியாக ஒரு கத்தியின் மூலம் நறுக்கி கொள்ளவும்.
  • அடுத்து நாம் பாதியாக வெட்டிய மாவை எடுத்து கூம்பு வடிவிற்க்கு அதை மடித்து அதனுள் நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதை அடியில் மடித்து அதன் ஓரங்களை சிறிது தண்ணீர் வைத்து மூடவும்.
  • இவ்வாறு மீதமுள்ள மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சமோசாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் சமோசாவை ஒவ்வொன்றாக கடாயின் அளவிற்கேற்ப போட்டு அதை நன்கு பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும்.
  • சமோசா பொன்னிறமானதும் ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter