Home Tamil ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்

0 comment
Published under: Tamil
உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சீஸ் பால்ஸ்.

சீஸ் பால்ஸ் உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகையாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. சீஸ் பால்ஸ்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சீஸ் பால்ஸ்ஸின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Broccoli Cheese Balls / ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்

Broccoli Cheese Balls / ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்: 

விதவிதமான மாலை நேர சிற்றுண்டிகளை நாம் செய்து சுவைக்க வேண்டும் என்று நம்மில் பல பேருக்கு விருப்பம் இருக்கும். அந்த விருப்பத்தை இந்த ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்கள் நிச்சயம் நிறைவேற்றும். இவை நாம் வழக்கமாக செய்து உண்ணும் சிற்றுண்டிகளுக்கு மாற்றாக மட்டும் இன்றி ஒரு நல்ல சத்தான உணவாகவும் இருக்கும். அதனால் இதை கட்டாயம் முயற்சி செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்க்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்: 

இந்த ப்ரோக்கோலி சீஸ் பால்ஸில் நாம் சேர்க்கும் பிரட் கிரம்ஸ் இதற்கு வெளியே நன்கு மொறு மொறுப்பான தன்மையையும், இதில் நடுவில் நாம் வைக்கும் சீஸ் உள்ளே நன்கு ஜுசியான ஒரு தன்மையும் கொடுக்கும். இதை நாம் உண்ணும் போது இந்த மொறு மொறுப்பு மற்றும் ஜுசியான காம்பினேஷன் மிக கச்சிதமாக இருக்கும். இவை நமக்கு ஒரு அட்டகாசமான அனுபவத்தை ஏற்படுத்தும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.

சில குறிப்புகள்: 

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்ஸை உருட்டுவதற்கு முன்பு கைகளில் எண்ணெய்யை தேய்த்துக் கொண்டால் அந்தக் கலவை கைகளில் ஒட்டாமல் வரும்.

அனைத்து உருண்டைகளும் ஒரே சைஸில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் அனைத்து உருண்டைகளும் ஒரே நேரத்தில் வெந்து நாம் எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்ஸை பிடிக்கும் போது நாம் நடுவில் வைக்கும் சீஸ்ஸை சுத்தி மாவு கலவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உருண்டை உடைந்து சீஸ் வெளியே வந்து விடும்.

இவ் உணவின் வரலாறு: 

முதல் முதலாக சீஸ் பால்ஸ் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் நகரத்தில் இருக்கும் செஷயர் என்ற இடத்தில் Elder John Leland என்கின்ற நபரால் 1801 ஆண்டின் போது அன்றைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் Thomas Jefferson க்கு பரிசளிப்பதற்காக சுமார் 560 kilo இடையில் செய்யப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக காலப்போக்கில் இவை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தன. இன்றைக்கு உலகம் முழுவதும் பல்வேறு விதமாக இந்த சீஸ் பால்கள் மக்களால் செய்து சுவைக்கப்பட்டு வருகின்றன.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்ஸை முழுமையாக சுமார் 35 நிமிடத்தில் இருந்து 40 நிமிடத்திற்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

இதை சுமார் ரெண்டு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

இதை ஒற்றிய உணவுகள்: 

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்: 

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்ய நாம் பயன்படுத்தும் ப்ரோக்கோலியில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் K மற்றும் C உள்ளது. இவை இதயம் மற்றும் கண்களுக்கு மிகவும் நல்லது.

நாம் இதில் பயன்படுத்தும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் சோள மாவில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம், மற்றும் கால்சியம் உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் பிரட் கிரம்சில் நார் சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.

Broccoli Cheese Balls / ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்
No ratings yet

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்

உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சீஸ் பால்ஸ்.
Prep Time15 minutes
Cook Time20 minutes
Total Time35 minutes
Course: Appetizer, Snack
Cuisine: American, British

தேவையான பொருட்கள்

 • 1 bowl ப்ரோக்கோலி
 • 4 உருளைக்கிழங்கு
 • 1 1/2 வெங்காயம்
 • 3 பச்சை மிளகாய்
 • 2 பல் பூண்டு
 • 2 tsp சோள மாவு
 • 1 cup பிரட் கிரம்ஸ்
 • 1 tsp ரெட் சில்லி ஃப்ளெக்ஸ்
 • 1 tsp மிளகு தூள்
 • 1 tsp இத்தாலியன் சீசனிங்
 • 1 tsp உப்பு
 • தேவையான அளவு சீஸ் க்யூப்ஸ்
 • தேவையான அளவு கொத்தமல்லி
 • தேவையான அளவு எண்ணெய்
 • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

 • முதலில் உருளைக்கிழங்குகளை சுமார் 20 இலிருந்து 25 நிமிடம் வரை வேக வைத்து அதை நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • இப்பொழுது ப்ரோக்கோலி, வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • அடுத்து நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ப்ரோக்கோலி, வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு கிளறி விடவும்.
 • பின்பு அதில் சோள மாவு, ரெட் சில்லி ஃப்ளெக்ஸ், மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், மற்றும் உப்பை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
 • இப்பொழுது அதில் 2 tsp பிரட் கிரம்ஸ்ஸை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
 • அடுத்து நாம் கைகளில் எண்ணெய்யை தடவிக் கொண்டு இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பின்பு அதை தட்டி, நடுவில் குழியை ஏற்படுத்தி அதில் ஒரு சீஸ் க்யூப்பை வைத்து நன்கு பேக் செய்யவும்.
 • பின்பு இந்த உருண்டைகளை cup இல் வைத்திருக்கும் பிரட் கிரம்ஸ்ஸில் உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
 • இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் பிடித்து வைத்த பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இதை பொரித்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதை மிதமான சூட்டில் சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக பக்குவமாக பொறுமையாக எண்ணெய்யில் போட்டு அது பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
 • அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் ரெடி. இதை சுட சுட உண்டு மகிழுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்ஸை தொட்டு உண்ண எந்த சைடிஷ் உகந்ததாக இருக்கும்?

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்ஸை தொட்டு உண்ண டொமேட்டோ கெட்ச்சப் மற்றும் மயோனெய்சு அட்டகாசமாக இருக்கும். நாம் வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் சட்னி, புதினா சட்னி, மற்றும் வெங்காய சட்னியையும் பயன்படுத்தலாம்.

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்ஸை சற்று காரமாக செய்வது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் வேண்டுமென்றால் ஒன்றிலிருந்து இரண்டு பச்சை மிளகாயை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலியுடன் வேறு ஏதும் காய்கறிகளை நாம் இதில் சேர்க்கலாமா?

தாராளமாக சேர்க்கலாம். பொடியாக நறுக்கிய வேகவைத்த பீன்ஸ் அல்லது பொடியாக துருவிய கேரக்ட்களை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்யும் கலவையை முந்தைய நாள் இரவே தயாரித்து வைக்கலாமா?

கூடாது. ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்ஸை செய்வதற்கு முன்பாக தான் தயாரிக்க வேண்டும்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter