தேங்காய் துவையல்

Tamil 0 comments

தேங்காய் உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கிறது. உடலில் செயல் திறனை ஊக்குவிக்கிறது. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும்.

தேங்காய் துவையல் செய்வதற்கு தேங்காய் துருவல் மற்றும் வறுத்த பருப்புகள் சேர்த்து அரைக்கவும்.
பெருங்காயம் சேர்ப்பதினால் இந்த துவையல் நறுமணம் அதிகரிக்கிறது.

thengai thogayal - தேங்காய் துவையல்

இந்த துவையல் எல்லா விதமான சாப்பாடுடனும் சாப்பிடலாம் . இட்லி, தோசை , அல்லது தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம்.
இந்த துவயலில் சிறுது நல்ல எண்ணெய் சேர்த்து சுட சுட சாதத்துடன் அப்பளம் வைத்து சாப்பிட்டால், இதன் சுவைத் தனி அலாதி.

நீங்கள் இந்த செய்முறையை 3 முதல் 4 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியும்

thengai thogayal 380x380 - தேங்காய் துவையல்
0 from 0 votes

தேங்காய் துவையல் Recipe

இந்த துவையல் எல்லா விதமான சாப்பாடுடனும் சாப்பிடலாம் . இட்லி, தோசை , அல்லது தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம்.
Prep Time10 mins
Cook Time15 mins
Course: Main Course, Side Dish
Cuisine: South Indian
Keyword: coconut thogayal

Ingredients for தேங்காய் துவையல்

 • 1 கப்
  தேங்காய் துருவல்
 • 2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு
 • 5 மிளகாய் வற்றல்
 • கொட்டைப் பாக்கு அளவு

  புளி
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
 • சுண்டக்காய் அளவு பெருங்காயத் துண்டு

How to make தேங்காய் துவையல்

 • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
 • அதில் மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுக்கவும்.
 • உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்
 • ஒரு ப்ளெண்டரில் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வறுத்த பெருங்காயத் துண்டு, தேங்காய்த் துருவல் போட்டு 3 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
 • கடைசியில் உளுத்தம் பருப்பை வைத்து ஒரு முறை அரைத்து விட்டு எடுத்து விடவும்.
 • சுவையான தேங்காய்த் துவையல் ரெடி.

image via a peek into my kitchen

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*