பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான மற்றும் விசேஷமான ஒரு திருநாள். இதை உழவர் திருநாள் என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகை அன்று அனைவரது இல்லங்களிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து சர்க்கரை பொங்கலை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். வழக்கமாக பொங்கல் அன்று பொங்கலை பானையில் தான் செய்வார்கள். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு பானையில் செய்வது சாத்தியம் இல்லாததால் இதை வீட்டிலேயே குக்கரில் செய்வது எப்படி என்று இங்கு காண்போம்.
இப்பொழுது கீழே சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
சக்கரை பொங்கல்
Ingredients
- 1 கப் பச்சரிசி
- 1/4 கப் பாசி பருப்பு
- 1 1/2 கப் வெல்லம்
- 2 கப் பால்
- 10 to 15 முந்திரி
- 2 மேஜைக்கரண்டி உலர் திராட்சை
- 1/2 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- நெய் தேவையான அளவு
Instructions
- முதலில் வெல்லத்தை தூள் செய்து, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் ஏலக்காயை தூள் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு பாசி பருப்பை போட்டு வறுத்து சிறிது சிவப்பானதும் எடுத்து விடவும். (பாசி பருப்பை அதிக நேரம் வறுத்து விடக்கூடாது. சிறிது நிறம் மாறிய உடனே எடுத்து விடவும்.)
- வறுத்து எடுத்த பாசி பருப்பை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு கப் அளவு பச்சரிசியுடன் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இரண்டரை கப் அளவு தண்ணீர், 2 கப் அளவு பால் மற்றும் கழுவி வைத்திருக்கும் பச்சரிசியை அதில் போட்டு குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக விடவும். (பால் சேர்க்க விரும்பாதவர்கள் தண்ணீர் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.)
- 3 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு குக்கர் மூடியை திறக்காமல் அதை அப்படியே சிறிது நேரம் வைக்கவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி உருக விடவும்.
- நெய் உருகியதும் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரியை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதே pan ல் உலர் திராட்சையைப் போட்டு திராட்சை உப்பும் வரை வறுத்து எடுக்கவும்.
- பின்பு அதே pan ல் ஒன்றரைக் கப் அளவு வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து கொள்ளவும். பின்பு கரைந்த வெல்லத்தை சிறிது நேரம் ஆற விடவும்.
- இப்பொழுது குக்கர் மூடியைத் திறந்து பச்சரிசியை சிறிது குழைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை வடி கட்டி ஊற்றி ஒரு கம்பி பாகு பதம் வரும் வரை சுட வைக்கவும்.
- வெல்லம் ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் அதில் குழைத்து வைத்திருக்கும் பச்சரிசியை போட்டு நன்கு ஒன்றோடு ஒன்று சேருமாறு கலந்து விடவும்.
- அடுத்து அதில் 3 மேஜைக்கரண்டி அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய் சேர்த்து நன்கு கிளரி விடவும்.
- பொங்கல் சிறிது இறுக ஆரம்பிக்கும் போது அதில் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூள், வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கலந்து வேக விடவும்.
- பொங்கல் சிறிது இலகுவான பதத்தில் இருக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். (அடுப்பிலிருந்து கெட்டியாக இறக்கினால் பொங்கல் ஆறியதும் மிகவும் கெட்டியாகி விடும்.)
- பொங்கல் ஆறியவுடணோ அல்லது சுட சுட இருக்கும் போதேவும் சுவைக்கலாம். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான இனிப்பான சர்க்கரை பொங்கல் தயார்.
- இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுந்து இந்த பொங்கலை மேலும் இனிப்பாக்குங்கள்.
An English version of this recipe can be seen here