சிக்கன் பப்ஸ்

By Praveen Kumar
சிக்கன் பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.

பப்ஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். பப்ஸ்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் பப்ஸ், மட்டன் பப்ஸ், முட்டை பப்ஸ், ஃபிஷ் பப்ஸ், மற்றும் வெஜிடபிள் பப்ஸ் மிகவும் பிரபலமானவை. அதில் இன்று இங்கு நாம் காண இருப்பது சிக்கன் பப்ஸ். இதனின் அதீத சுவை ஆசியா முழுவதும் பலரின் நாக்கை கட்டி போட்டு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Chicken Puff

பெரும்பாலும் பப்ஸ் பிரியர்கள் பப்ஸ்சை பேக்கரியில் வாங்கி தான் சுவைக்கிறார்கள். ஆனால் இதை நாம் வீட்டிலேயே பேக்கரிகளில் கிடைப்பதை போலவே அதே சுவையில் ஆரோக்கியமான முறையில் செய்து சுவைக்கலாம் மற்றும் தைரியமாக நம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். சிக்கன் பப்ஸ்சை செய்வது சிறிது கடினமாக இருந்தாலும் மற்றும் அதிக நேரம் எடுத்தாலும் அதை சுவைக்கும் போது இவை ஏதும் பெரிதாக தெரியாது. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊர ஆரம்பித்து விட்டதா?

இப்பொழுது கீழே சிக்கன் பப்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Puff
5 from 1 vote

சிக்கன் பப்ஸ்

சிக்கன் பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
Prep Time20 minutes
Cook Time30 minutes
Total Time50 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian, South Indian

தேவையான பொருட்கள்

  • கப் சிக்கன் துண்டுகள்
  • 2 கப் கப் மைதா மாவு
  • ½ கப் கப் வெண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • ½ கப் கப் பச்சை பட்டாணி
  • 3 பூண்டு பல்
  • 1 இஞ்சி துண்டு
  • ¼ மேஜைக்கரண்டி கடுகு
  • ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ மேஜைக்கரண்டி சீரக தூள்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl ல் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு மாவாக பிணைந்து கொள்ளவும். (சுமார் முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றவும்.)
  • இப்பொழுது சப்பாத்தி தேய்க்கும் கல்லில் மாவை தூவி இந்த உருட்டிய மாவை இரண்டாக பிரித்து அதில் ஒவ்வொன்றாக வைத்து அதன் மேலே சிறிது மாவை தூவி நன்கு பெரிதாக தேய்த்து கொள்ளவும்.
  • பின்பு முதலில் தேய்த்து வைத்திருக்கும் மாவை கல்லில் வைத்து அதன் மேலே 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை போட்டு பக்குவமாக தேய்த்து கொஞ்சம் மைதா மாவை தூவி விடவும்.
  • பின்னர் இதன் மேலே இரண்டாவதாக தேய்த்த மாவை வைத்து மேலிருந்து ஒரு மடி கீழே இருந்து ஒரு மடியாக மடித்து மீண்டும் அதன் மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி சிறிது மைதா மாவை தூவி இடது புறத்திலிருந்து ஒரு மடி மற்றும் வலது புறத்தில் இருந்து ஒரு மடி மடிக்கவும்.
  • இப்பொழுது இந்த மாவை ஒரு கவரில் போட்டு சுமார் 40 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • 40 நிமிடத்திற்கு பிறகு எடுத்து மீண்டும் அதை சப்பாத்தி கல்லில் வைத்து பக்குவமாக தேய்த்து அதன் மேல் வெண்ணெய்யை தடவி சிறிது மைதா மாவை தூவி மீண்டும் அதே போன்று மடித்து சுமார் 40 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • மீண்டும் 40 நிமிடத்திற்கு பிறகு எடுத்து 2 முறை செய்தது போன்றே மீண்டும் ஒரு முறை செய்து 40 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • 40 நிமிடத்திற்கு பிறகு இந்த மாவை எடுத்து சப்பாத்தி கல்லில் மைதா மாவை தூவி இதை வைத்து பப்ஸ்க்கு தேவையான அளவு அடர்த்தியாக தேய்த்து கொள்ளவும்.
  • பின்பு மாவின் ஓரங்களில் இருக்கும் மாவை ஒரு கத்தியின் மூலம் வெட்டி அதை செவ்வக வடிவிற்கு கொண்டு வரவும்.
  • அடுத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப பப்ஸ்யின் சைஸுக்கு ஏற்ப இந்த மாவை ஒரு கத்தியின் மூலம் துண்டுகளாக்கி வைத்து கொள்ளவும். (மீடியம் சைஸ் ஆக வெட்டினால் சுமார் 10 துண்டுகள் வரை வரும்.)
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் கடுகை போட்டு அது வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கருவேப்பிலை மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிண்டி விட்டு வதக்கவும்.
  • பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
  • 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி மீண்டும் ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • சிக்கன் கலவை நன்கு ஆறியவுடன் இதை நாம் வெட்டி வைத்திருக்கும் மாவு துண்டுகளின் நடுவில் வைத்து அதன் ஓரங்களில் தண்ணீரை தடவி மடித்து பப்ஸ்சை வேக வைக்க தயார் செய்து வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறே அனைத்து பப்ஸ்சையும் தயார் செய்த பின் இதை ஒரு தட்டில் வைத்து அதை ஓவனில் சரியாக 400 f வைத்து அதன் மேலே பொன்னிறம் ஆனதும் எடுக்கவும். (பாப்ஸ் பொன்னிறத்தை எட்டுவதற்கு 20 லிருந்து 25 நிமிடம் வரை எடுக்கலாம்.)
  • பப்ஸ் பொன்னிறம் ஆனதும் அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட கெட்சப்வுடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் பப்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment