Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை மாமிசம் சேர்க்காமலும் செய்யப்படுகிறது. மாமிசம் சேர்க்காமல் செய்யப்படும் கோலா உருண்டைகளை கிரீஸ் நாட்டில் hortokeftedes என்றும், துருக்கியில் Çiğ köfte என்றும் அழைக்கிறார்கள். மாமிசம் இல்லாமல் செய்யப்படும் கோலா உருண்டைகளில் மாமிசத்துக்கு பதிலாக உருளைக்கிழங்கோ அல்லது பன்னிர்ரோ சேர்க்கப்படுகிறது. சில பகுதிகளில் இவை கிரேவி ஆகவும் செய்யப்படுகிறது.
மட்டன் கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான மட்டன் கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
இப்பொழுது கீழே மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மட்டன் கோலா உருண்டை
Ingredients
- 250 g மட்டன் கொத்துக்கறி
- 1 பெரிய வெங்காயம்
- 1 மேஜைக்கரண்டி பொட்டுகடலை
- 1 பச்சை மிளகாய்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 பட்டை துண்டு
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 இஞ்சி துண்டு
- 2 பூண்டு பல்
- மிளகாய் தூள் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கை அளவு கொத்தமல்லி
Instructions
- முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடியாக நறுக்கி, பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை, ஒரு மேஜைக்கரண்டி சோம்பு, 2 கிராம்பு, மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதில் 2 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கொத்துக்கறி, மஞ்சள் தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிண்டி சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 5 நிமிடத்திற்குப் பிறகு வெந்த கொத்துக்கறியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (கறியிலிருந்து தண்ணீர் வந்திருந்தால் தண்ணீர் இல்லாமல் கறியை மட்டும் எடுத்து வைக்கவும்.)
- இப்பொழுது இந்த கரியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அரைத்த கறியில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையை போட்டு நன்கு பிணைந்து கொள்ளவும்.
- கோலா உருண்டைகளை பொரித்து எடுக்கும் போது கரி தனியாக பிரிந்து விடாமல் இருப்பதற்காகவே பொட்டுகடலை அரைத்து சேர்க்கிறோம். அதனால் மாவு தண்ணியாக இருந்தால் அதற்கேற்றவாறு பொட்டுக்கடலை பவுடரை கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
- இப்பொழுது பிணைந்து வைத்திருக்கும் இந்தக் கரியை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வட சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பிடித்து வைத்திருக்கும் இந்த உருண்டைகளை வட சட்டியின் அளவிற்கேற்ப ஒரு முறையோ அல்லது இரு முறையோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிவிட்டு பொன்னிறமானதும் எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கெட்சப் உடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
You can find the recipe for Mutton Kola Urundai in English here