Home Tamil ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

Published under: Tamil
ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளுக்கு அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு இவை பிரபலமானவை.
French Fries

ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளுக்கு அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு இவை பிரபலமானவை. கல்லூரி மாணவர்கள் மற்றும் காதல் ஜோடிகள் மத்தியில் ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளுக்கு என்றுமே தனி இடம் தான். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் இதற்கு இருக்கும் மவுசு தனி தான். எவ்வளவு உண்டாலும் மேலும் மேலும் உண்ணத்தோன்றும் உணவு வகை இவை. உள்ளே மிருதுவாகவும் வெளியே மொறு மொறுப்பாகவும் மற்றும் அதன் உப்பு கலந்த சுவை அனைவருடைய நாவின் சுவை உணர்வுகளையும் சுண்டி இழுக்கின்றன. இதனாலேயே இதை மீண்டும் மீண்டும் உண்ண தூண்டுகின்றன.

French Fries

ஃப்ரெஞ்ச் ப்ரை எங்கே உருவானது என்று பல யூகங்கள் உலா வருகின்றன. ஒரு சாரார் இவை பிரான்சில் உருவானவை என்றும் மற்றொரு சாரார் இவை பெல்ஜியத்தில் உருவானவை என்றும் கூறுகின்றனர். ஆனால் வரலாற்றுப் பதிவின் படி இவை பதினாறாம் நூற்றாண்டின் போது பெல்ஜியத்தில் உருவானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில உணவு வகைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரபலமடைந்து இருக்கும். ஆனால் ஃப்ரெஞ்ச் ப்ரை உலகம் முழுவதும் படு ஃபேமஸ். இவை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான செய்முறை கொண்டு செய்யப்பட்டாலும் உண்ணும் முறைகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ketchup ஓ, mayonnaise ஓ, tomato sauce ஓ, அல்லது vinegar கொண்டோ உண்கின்றனர்.

என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊர ஆரம்பித்து விட்டதா? சரி இப்பொழுது கீழே தேவையான பொருட்களையும் செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

French Fries
5 from 2 votes

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் Recipe

ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளுக்கு அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு இவை பிரபலமானவை.
Prep Time15 mins
Cook Time15 mins
Course: Appetizer, Snack
Cuisine: American
Keyword: french fries

Ingredients for ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

  • 1/2 கிலோ பெரிய சைஸ் உருளைக்கிழங்கு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 சிட்டிகை மிளகு தூள்

How to make ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

  • முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி அதை நீளவாக்கில் ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு ஏற்ப நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும். (20 நிமிடங்கள் இவ்வாறு தண்ணீரில் போட்டு வைப்பதால் உருளைக்கிழங்கின் வெளியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீரில் இறங்கி விடும். பொரிக்கும் போது மொரு மொறுப்பாக வரும்.)
  • 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். பின்பு ஒரு மேஜைக்கரண்டி உப்பை அதில் சேர்த்து கொள்ளவும்.
  • அடுத்து தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து இதில் போடவும்.
  • ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். (இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு பொரிக்கும் போது உள்ளே மிருதுவாகவும் வெளியே மொறு மொறுப்பாகவும் இருக்கும்.)
  • பத்து நிமிடங்களுக்குப் பிறகு சுடு தண்ணீரில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஒரு துணியை விரித்து உருளைக்கிழங்கை பரப்பி அதில் இருக்கும் ஈரத்தை துடைத்து கொள்ளவும். (தண்ணீருடன் உருளைக்கிழங்கை எண்ணெயில் போட கூடாது.)
  • பிரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு உருளைக்கிழங்கை இரண்டு கட்டங்களாக பொரிக்க வேண்டும்.
  • முதலில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உருளைகிழங்கை அதில் போட்டு நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் பொரித்துக் கொள்ளவும்.
  • நான்கைந்து நிமிடங்களுக்கு பிறகு உருளைக்கிழங்கை எடுத்து ஒரு தட்டில் போட்டு எண்ணெயை வடிய விடவும். (இப்பொழுது உருளைகிழங்கு வெண்மை நிறமாக தான் இருக்கும். இரண்டாம் கட்டமாக பொரிக்கும் போது தான் உருளைக்கிழங்கை பொன்னிறமாக எடுக்க வேண்டும்.)
  • அடுத்து இரண்டாம் கட்டமாக எண்ணெயை நன்றாக சுட வைத்து அதில் உருளைக்கிழங்கை போடவும்.
  • இம்முறை பொன்னிறமாகும் அளவிற்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு bowl ல் போட்டு சிறிது அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் தூவி கிளறி கொள்ளவும்.
  • இப்பொழுது ரெஸ்டாரன்ட் களில் கிடைக்கும் பிரெஞ்ச் ஃப்ரை களைப் போன்றே சூடான மொறு மொறுப்பான பிரெஞ்சு ப்ரைஸ் தயார்.
  • இதை வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள்.

Here is theFrench Fries recipe in English

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.