Home Tamil காஜு கட்லி

காஜு கட்லி

0 comments
Published under: Tamil
இனிப்பு பிரியர்களின் டாப் 10 இனிப்பு வகைகளில் காஜு கட்லி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

காஜு கட்லி மிகப் பிரபலமான ஒரு இந்திய இனிப்பு வகை. இனிப்பு பிரியர்களின் டாப் 10 இனிப்பு வகைகளில் காஜு கட்லி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் அதனின் சுவை அவ்வளவு அசத்தலாக இருக்கும். இந்தியாவில் உதயமான இவை இதனின் அதீத சுவையினால் வங்க தேசம், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது. ஒரு சாரார் இதை வெறும் முந்திரி பவுடர், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் கொண்டு செய்கிறார்கள். மற்றொரு சாரார் இதை முந்திரி பவுடர் சர்க்கரை பால் மற்றும் dry fruits கொண்டு செய்கிறார்கள்.

Kaju Katli

பெரும்பாலும் காஜு கட்லியை இனிப்பு பிரியர்கள் ஸ்வீட் கடைகளிலேயே ஆர்டர் செய்து உண்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் மிக சுலபமாக செய்து விடலாம். மிக எளிமையான செய்முறையைக் கொண்ட இவை செய்வதற்கும் மிகக்குறைந்த நேரம் மட்டுமே பிடிக்கும். அது மட்டுமின்றி இதை செய்வதற்கும் மிக குறைவான பொருட்களே தேவை.

இப்பொழுது கீழே காஜு கட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Kaju Katli
5 from 1 vote

காஜு கட்லி

இனிப்பு பிரியர்களின் டாப் 10 இனிப்பு வகைகளில் காஜு கட்லி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
Course: Dessert
Cuisine: Indian, North Indian
Keyword: Indian Sweet

Ingredients

  • 1 கப் முந்திரி
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
  • நெய் தேவையான அளவு
  • சில்வர் லீவிஸ் தேவையான அளவு
  • பட்டர் பேப்பர் தேவையான அளவு

Instructions

  • முதலில் மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவு முந்திரியை போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். (ரொம்ப நேரம் அரைத்து விடக்கூடாது. அப்படி செய்தால் முந்திரி பவுடரில் எண்ணெய் வாசம் வந்து விடும்.)
  • முந்திரியை அரைத்த பின் நன்கு சலித்து கொள்ளவும். அரை படாமல் இருக்கும் சிறு சிறு முந்திரித் துண்டுகளை மீண்டும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரை கப் அளவு சர்க்கரையை போட்டு அது நன்கு கரைந்து ஒரு கம்பி பதம் வரும் வரை அதை கிண்டி விடவும்.
  • பாகு ஒரு கம்பிப் பதம் எட்டியதும் அதில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பவுடரை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். (கிளறுவதை நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் மாவு அடி பிடித்து விடும்.
  • அடுத்து ஏலக்காய் துளை அதில் தூவி கிளறி விடவும். முந்திரி பவுடர் வெந்து மாவு சிறிது கட்டியாக ஆக தொடங்கும் நிலையில் அடுப்பை முற்றிலுமாக குறைத்து கொள்ளவும்.
  • மாவு உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே மாவை சுமார் ஒரு நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்கவும். (மாவு உருட்டும் பதம் வருவதற்கு சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை எடுக்கும்.)
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு இந்த மாவை ஒரு கால் இன்ச் ஆழம் கொண்ட டிரேவை எடுத்து அதில் ஒரு பட்டர் பேப்பர் விரித்து அதில் மாற்றிக் கொள்ளவும்.
  • பின்னர் அதன் மேல் மற்றொரு பட்டர் பேப்பரை நெய் தடவி போட்டு சப்பாத்தி தேக்கும் கட்டையால் தேய்த்து விடவும்.
  • பின்பு மேலிருக்கும் பட்டர் பேப்பரை எடுத்து விட்டு சில்வர் லீவிஸ் ஐ அதன் மேலே பக்குவமாக வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கத்தியால் டைமன் வடிவிலோ அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவிலோ இதை வெட்டிக் கொள்ளவும்.
  • வெட்டிய பின் சிறிது நேரம் ஆறவிட்டு பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்தோ அல்லது ஆறு விட்ட பிறகேவும் இதை சுவைக்கலாம்.
  • இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் சுவையான காஜு கட்லி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Kaju Katli Recipe in English

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter