வெஜிடபிள் புலாவ்

Tamil 0 comments

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. இவை பெரும்பாலும் சைவப் பிரியர்கள் பன்னீர் பட்டர் மசாலா அல்லது ரைத்தாவை வைத்தும், அசைவப் பிரியர்கள் முட்டை அல்லது சிக்கன் கறி வைத்து உண்கிறார்கள்.

vegetable pulao - வெஜிடபிள் புலாவ்

இந்த பழமையான உணவு வகை முகலாய படையெடுப்பின் போது இந்தியாவுக்கு வந்ததாக ஒரு சாராரும், மற்றொரு சாரார் இவை பண்டைய கால இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல Turkey, Greek, Persia, மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர்.

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த வெஜிடபிள் புலாவ் மணமான மற்றும் சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட. இதில் சேர்க்கப்படும் கேரட்டில் கண் பார்வைக்கு மற்றும் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு தேவையான விட்டமின் A வும், பீன்ஸில் புரதச் சத்தும், காலிபிளவர் மற்றும் பட்டாணியில் விட்டமின் c வும், விட்டமின் k  வும் உள்ளது. இப்பொழுது கீழே சுவையான வெஜிடபிள் புலாவ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

vegetable pulao 380x380 - வெஜிடபிள் புலாவ்
0 from 0 votes

வெஜிடபிள் புலாவ் Recipe

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த வெஜிடபிள் புலாவ் மணமான மற்றும் சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட
Prep Time20 mins
Cook Time30 mins
Course: Main Course
Cuisine: South Indian
Keyword: dinner, Lunch, vegetable pulao

Ingredients for வெஜிடபிள் புலாவ்

 • 1/2 கப் பாசுமதி அரிசி
 • 1 பெரிய வெங்காயம்
 • 8 to 10 பீன்ஸ்
 • 1/2 கப் பட்டாணி
 • 1/2 கப் காலிஃப்ளவர்
 • 1 கேரட்
 • 3 பச்சை மிளகாய்
 • நெய் தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு
 • 2 பிரியாணி இலை
 • 1 பட்டை
 • 1 ஸ்டார் பூ
 • 3 ஏலக்காய்
 • 4 கிராம்பு
 • 8 to 10 முந்திரி
 • 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
 • புதினா தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு

How to make வெஜிடபிள் புலாவ்

 • முதலில் பாசுமதி அரிசியை எடுத்து நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி ஊருவதற்குள் கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
 • ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய விடவும்.
 • நெய் நன்கு காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, ஸ்டார் பூ, கிராம்பு, ஏலக்காய், மற்றும் பட்டை சேர்த்து வதக்கவும்.
 • பின்பு அதில் முந்திரி மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போடவும். பிறகு அதில் பச்சை மிளகாயையும், இஞ்சி பூண்டு பேஸ்ட்ஐயும் சேர்த்து வதக்கவும்.
 • அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், காலிபிளவர், மற்றும் பட்டாணி சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.
 • இரண்டு நிமிடம் வதங்கியதும் அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை போடவும். பின்பு அதில் 2 கப் தண்ணீர், சிறுது அளவு புதினா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • நன்கு கலக்கிய உடன் அதில் ஒரு மூடியை போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். (தண்ணீர் வற்றி சாதம் உதிரி உதிரியாக வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.)
 • சாதம் வெந்ததும் அதை எடுத்து ஒரு பவுலில் வைத்து அதில் சிறிது கொத்தமல்லி தூவி கார்னிஷ் செய்யவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான சுவையான வெஜிடபிள் புலாவ் தயார். இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

You can get the English recipe of Vegetable Pulao here.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*